யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது சட்ட நடவடிக்கை தொடர்கிறது. 📍 பின்னணித் தகவல்கள்: கடந்த 21ஆம் திகதி தையிட்டி விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட அறப்போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக அங்கு அமைதியற்ற சூழல் உருவானது. அன்றைய தினம் வேலன் சுவாமி, வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையின் 3 உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் காவற்துறையினராரால் கைது செய்யப்பட்டு, பின்னர் மல்லாகம் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ⚖️ புதிய வழக்கு விபரங்கள்: இந்நிலையில், குறித்த போராட்டத்தில் பங்கேற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் ஏனைய 11 உறுப்பினர்களுக்கு எதிராக பலாலி காவற்துறையினராரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற கட்டளை: வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், சம்பந்தப்பட்ட 11 உறுப்பினர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை (Summons) அனுப்பியுள்ளது. அமைதி வழியில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள் பிரதிநிதிகள் மீது இவ்வாறான தொடர்ச்சியான வழக்குகள் பதியப்படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Thayitti #Jaffna #Protest #HumanRights #TamilPolitics #SriLankaNews #Justice #ValiNorth #ThaiyittiVihara #BreakingNewsTamil #யாழ்ப்பாணம் #தையிட்டி #போராட்டம் #வலிவடக்கு
📢 தையிட்டி விகாரை எதிர்ப்பு போராட்டம்: வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை! – Global Tamil News
1