புத்தாண்டிலும் தொடரும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் – நெடுந்தீவு கடற்தொழிலாளர்களின் லட்ச ரூபாய்...

புத்தாண்டிலும் தொடரும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் – நெடுந்தீவு கடற்தொழிலாளர்களின் லட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுப்பு

by ilankai

புத்தாண்டு தினத்தன்றும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் நெடுந்தீவு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடற்பரப்பினுள் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் நெடுந்தீவு கடற்தொழிலாளர்களின் வலைகளை அறுத்து , பல இலட்ச ரூபாய் நஷ்டத்தினை ஏற்படுத்தியுள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி பல்வேறு போராட்டங்களை நடாத்திய போதிலும் , அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் , புத்தாண்டில் கூட தம்மால் சுதந்திரமாக தமது கடல் எல்லைக்குள் தொழில் செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

Related Posts