“இதொரு சட்டவிரோத கட்டடம்” என தையிட்டி விகாரைக்கு முன்பாக அறிவித்தல் பலகை நாட்டப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலி.வடக்கு பிரதேச சபை செயலாளருக்கு பலாலி பொலிஸார் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர். கடந்தஹ் 18ஆம் திகதி நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் அமர்வின் போது, ” இதொரு சட்டவிரோத கட்டடம்” என தையிட்டி விகாரை முன்பாக மும்மொழிகளிலும் பெயர் பலகையை நாட்ட தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையிலையே வலி. வடக்கு பிரதேச செயலருக்கு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் பெயர் பலகை நாட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது அந்த கடிதத்தில்,தையிட்டி விகாரைக்கு முன்பாக சட்டவிரோத கட்டிடம் என பெயர் பலகை நடப்படப் போவதாகபுலனாய்வுப் பிரிவு மூலம் தகவல் கிடைத்துள்ளது.அதன்படி இவ்வாறான அறிவித்தல் பலகை காட்சிப்படுத்துவதன் மூலம் பௌத்தம் மற்றும் இந்து சமயத்துக்கு இடையிலான நல்லிணத்தில் முரண் நிலை தோன்றுவதுடன் சமாதான சீர்குலைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறான பெயர் பலகை வலிகாமம் வடக்கு பிரதேச சபையினாலோ வேறு அமைப்புகள் மூலமோ நிறுவனங்கள் மூலமோ காட்சிப்படுத்தும் நோக்கம் இருப்பின் அதை சட்டரீதியாக மேற்கொள்ளுமாறும் சட்ட ரீதியற்ற முறையில் அவ்வாறு அறிவித்தல் பலகையை நாட்ட நடவடிக்கை எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கின்றோம் – என்றுள்ளது.
தையிட்டி விகாரை முன்பாக “இதொரு சட்டவிரோத கட்டடம்” அறிவித்தல் பலகை நாட்டினால் சட்ட நடவடிக்கை எடுப்போம் – பொலிஸார் எச்சரிக்கை
1