தையிட்டி திஸ்ஸ விகாரை காணிகளை சுவீகரிக்க சதிகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள யாழ்.மாவட்ட செயலர் பிரதீபன் காணி உரிமையாளர்களுடன் இன்று காலை தனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் – ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாட்டினை தெரிவித்ததாக மாவட்ட செயலர் பின்னராக ஊடகங்களிடையே தெரிவித்துள்ளார்.கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்க, விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் முடியும் எனத் தெரிவித்து, காணி உரிமையாளர்களுடன் விடுவிக்கக் கூடிய காணிகளின் சாத்தியப்பாடுகள் மற்றும் எல்லைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கு மாவட்ட செயலர் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு காணி உரிமையாளர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.இதனிடையே மிகுதிக் காணிகள் 4 கட்டங்களாக விடுவிப்பதற்கு யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விகாராதிபதி வாழிடம் உள்ளிட்ட ஏனைய பல கட்டடங்களை அகற்றி வேறிடத்துக்கு கொண்டு செல்லும் வகையிலான செயற்பாடுகளுக்க்கான அவகாசம் கருதியே இந்த 4 கட்டங்கள் வரையறை வகுக்கப்படுள்ளதென காணி உரிமையாளர்கள் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.அதேநேரம் விகாரை அமைந்துள்ள காணி மூன்று தரபினருக்குரியதாக இருக்கின்றது. ஆனாலும் அந்த காணிக்கான மாற்றுக் காணி குறித்தோ, நஸ்ட ஈடு தொடர்பிலும் எந்தவிதமான தீர்மானமோ யோசனையோ எடுக்கப்படவில்லைமுயற்சி ஒரு யோசனையாகவே இன்று தீர்மானிக்கப்பட்டு துறைசார் தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது.அது இறுதி முடிவாக அல்லாது யோசனையாகவே இருப்பதனால் நாம் எதிர்வரும் 3 ஆம் நாளன்று ஏற்கனவே தீர்மானித்திருந்த தையிட்டிப் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த தீர்மானித்துள்ளோமெனவும் அறிவித்துள்ளனர்.
3ம் திகதி போராட்டம் நிச்சயம்!
1