பிரித்தானியாவில் நிலவும் கடும் குளிர்காலத்திற்கு மத்தியில், சுமார் 1.8 மில்லியன் சிறுவர்கள் தத்தமது வீடுகளுக்குள் குடும்ப வன்முறையினால் (Domestic Abuse) பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் முன்னணி சிறுவர் நல அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியான தாக்குதல் மட்டுமல்லாது, உளவியல் ரீதியான சித்திரவதைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு 5 சிறுவர்களில் ஒருவர், தமது வாழ்நாளில் ஏதோ ஒரு கட்டத்தில் குடும்ப வன்முறையை எதிர்கொள்கின்றனர். இந்த குளிர்காலத்தில் அந்த எண்ணிக்கை 1.8 மில்லியனை எட்டியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நீண்ட நேரம் வீட்டிலேயே இருப்பதால், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் தூக்கமின்மை, பசியின்மை, கல்வியில் பின்னடைவு மற்றும் மனச்சோர்வு, நீண்ட கால உளவியல் ரீதியான வடுக்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் உள்ள சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவ பிரித்தானியாவில் பல்வேறு அமைப்புகள் 24 மணிநேரமும் இயங்கி வருகின்றன: Childline (0800 1111): சிறுவர்கள் எந்நேரமும் அழைத்துத் தமது குறைகளைக் கூறலாம். National Domestic Abuse Helpline (0808 2000 247): வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கான உதவி மையம். காவல்துறையினா் ஒரு வீட்டில் குடும்ப வன்முறை நடந்ததை அறிந்தால், மறுநாள் காலையிலேயே சம்பந்தப்பட்ட குழந்தையின் பாடசாலைக்குத் தகவல் தெரிவித்து, அந்த க் குழந்தைக்குத் தேவையான ஆதரவை வழங்கும் திட்டம் ஆகும். Tag Words: #UKNews #DomesticAbuse #ChildSafety #WinterCrisis #MentalHealth #Childline #UKHealth #SocialJustice #TamilNewsUK
🏚️ பிரித்தானியாவில் குளிர்காலத்தில் 1.8 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு : – Global Tamil News
2
previous post