சுற்றுலா கடைசி:வடமாகாண சாதனைகள்!

by ilankai

இலங்கையில் வடமாகாணம் கல்வியை தொடர்ந்து சுற்றுலாத்துறையிலும் கடைசி இடத்தையே தக்கவைத்துன்ளது.இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2018 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை முறியடித்து சாதனை படைத்துள்ளது.திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டான 2018 இல் பதிவாகியிருந்தது.2,3இலட்சம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2025 ஆம் ஆண்டினில் சுற்றுலாப் பயணி எண்ணிக்கையை தாண்டியதையடுத்து சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.சுற்றுலாத்துறை இலங்கை பொருளாதாரத்தின் பிரதான தூணாகத் தொடர்ந்து நீடிப்பதுடன், வெளிநாட்டு செலாவணி வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.எனினும் வடமாகாணசபையின்  தூரநோக்கற்ற அதிகாரிகள் காரணமாக சுற்றுலாத்துறையில்; இலங்கையின் கடைசி மாகாணமாக வடமாகாணமுள்ளது. 

Related Posts