தொலைக்காட்சி அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படலாம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை! by admin December 29, 2025 written by admin December 29, 2025 தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். ஊடக அமைச்சினால் நிபந்தனைகளுக்கு உட்பட்டே அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் குறித்த நிபந்தனைகள் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட அலைவரிசையின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் (ரத்து செய்யும்) அதிகாரம் ஊடக அமைச்சருக்கு உண்டு. தற்போது ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசைக்கும் வழங்கப்பட்டுள்ள ஒளிபரப்பு அனுமதிப்பத்திரமானது ஒரு தற்காலிக அனுமதிப்பத்திரம் மட்டுமே என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். ஊடக தர்மத்தை பேணுவதற்கும், வழங்கப்பட்ட வழிகாட்டல்களை பின்பற்றுவதற்கும் அனைத்து அலைவரிசைகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது.
தொலைக்காட்சி அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படலாம்: – Global Tamil News
3
previous post