யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வின் போது நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஆழிப்பேரலையின் 21-வது ஆண்டு நினைவேந்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கொட்டும் மழையில் நனையாமல் இருப்பதற்காக, கடற்தொழில் அமைச்சர் ஒரு கையால் குடை பிடித்தபடி தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். அதன் போது கூட மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா ஆகியோரும் உடனிருந்தனர். தேசியக் கொடியை ஏற்றும் போது அதற்குரிய கௌரவத்தை அளிக்க வேண்டும் என்றும், மழையில் நனைந்தாவது கொடியை ஏற்றியிருக்க வேண்டும் அல்லது குடையை மற்றவர்கள் பிடித்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். தேசியக் கொடி ஏற்றப்படும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மீறப்பட்டதாகப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். #JaffnaNews #NationalFlag #Controversy #SriLankaPolitics #TsunamiRemembrance #ProtocolViolation #SocialMediaViral #JaffnaDistrictSecretariat #TamilNews
🚩 சர்ச்சையில் அமைச்சர்: கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தேசியக் கொடி ஏற்றம்! – Global Tamil News
5