நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தையிட்டி விகாரை அகற்றம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்வி பெரும் கூச்சல் குழப்பத்திற்கு இட்டுச் சென்றது. இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுவதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? தென்னிலங்கையில் சட்டவிரோத விகாரைகள் உடைக்கப்படும் போது, இங்கு ஏன் முடியாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பினார். அதற்கு “விகாரையை உடைக்க முடியாது” என பதிலளித்த கடற்தொழில் அமைச்சர் மேலதிக கேள்விகளுக்கு பதில் அளிக்காது மௌனம் காத்தார். இந்தத் தருணத்தில், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என அடையாளப்படுத்திக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆதரவாளர்கள், “தையிட்டி விகாரை பற்றி பேச வேண்டாம்” எனக் கூறி கூச்சலிட்டனர். அத்துடன் தையிட்டி விவகாரத்தை விட கிராமியக் கோவில் பிரச்சனையே முக்கியம் என அவர்கள் வாதிட்டனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி, அமைச்சர் எவ்வித விளக்கமும் அளிக்காமல் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறினார். கூட்டத்தின் முடிவில் குழப்பம் விளைவித்தவர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் கைகுலுக்கிச் சென்றது, திட்டமிட்டே இந்த விவாதம் திசைதிருப்பப்பட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழ் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். Tag Words: #Jaffna #ThaiyittiVihare #GajendrakumarPonnambalam #NPP #SriLankaPolitics #Controversy #DistrictMeeting #JaffnaNews #TamilNationalism #PoliticalUnrest
” தையிட்டி விகாரை தொடர்பில் பேச வேண்டாம்” – சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் தேசிய மக்கள் சக்தியினர் குழப்பம் – Global Tamil News
7