டக்ளஸ் வெளியே வருவது கடினம்!

by ilankai

 துணை இராணுவ குழுவாக செயற்பட்ட ஈபிடிபியின் பெரும்பாலானவர்களை இலங்கை புலனாய்வு துறை பயன்படுத்தியிருந்த நிலையில் இராணுவத்திடமிருந்து துப்பாக்கிகளை பொறுப்பு எடுத்தவர்கள் பலர் இறந்து விட்டார்கள் பலர் வெளிநாடு சென்று விட்டார்கள் அவை எங்கே இருக்கின்றன என்பது எனக்குத்தெரியாதென டக்ளஸ் குற்றப்புலனாய்வு பிரிவிடம் தெரிவித்துள்ளார்.அதேவேளை டக்;ளசுக்கு 2000 ஆம் ஆண்டில் இராணுவத்தால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் பட்டியலில் ரி -56 துப்பாக்கிகள் 13 மற்றும் 9மிமி கைத்துப்பாக்கிகள் 6 பற்றிய பதிவுகளே காணப்படுகின்றன.அவற்றை தனது சொந்த பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும் வேறு பயங்கரவாத மற்றும் கொலை கொள்ளை செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது இல்லை எனவும் கையொப்பமிட்டு இவற்றை டக்ளஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.அவ்வாறு தனது சொந்த பொறுப்பில் இருக்க வேண்டிய தனது பாதுகாப்புக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆயுதங்கள் தற்போது எங்கே இருக்கின்றன என்பதை தான் அறியவில்லை என தற்போது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்அவர் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்கள் சில நாட்டின் பயங்கர குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாளத்திற்கு சென்று இருப்பது அவர் இந்த விடயத்தில் இருந்து தற்போது தப்புவது கடினம் என்ற விடயம் ஊடக பரப்பில் பரவலாக பேசப்படுகிறதுஇதனிடையே கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  72 மணி நேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க  குற்றப்புலனாய்வு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழு தலைவனான ‘மாகந்துரே மதுசிடம்’ நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த விசாரணைகளுக்கு அமைய, அவர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டார்.

Related Posts