🕌 சிரியா பள்ளிவாசலில் பயங்கர குண்டுவெடிப்பு: 8 பேர் பலி! 💥 – Global Tamil News

by ilankai

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸ் (Homs) நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வாடி அல்-தஹாப் (Wadi al-Dahab) பகுதியில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் பள்ளிவாசலில், இன்று (டிசம்பர் 26) வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது வெடிப்பு இடம்பெற்றுள்ளது.  இந்தக் கோரத் தாக்குதலில் 8 பேர் பலியாகினர், மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பிட்ட இந்தப் பகுதி அலவைட் (Alawite) முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடமாகும். பள்ளிவாசலினுள் வெடிகுண்டுகள் முன்கூட்டியே வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. தற்போது அந்தப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிரியாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #Syria #Homs #MosqueBlast #BreakingNews #SyriaNews #PrayForSyria #WorldNews #HomsExplosion #சிரியா #குண்டுவெடிப்பு

Related Posts