தன்னைத்தானே “பொதுச் செயலாளர்” எனக் கூறிக் கொண்டு செயல்படும் நபர்களுக்கு, கட்சி உறுப்பினர்களை உறுப்பினர் நிலைமையிலிருந்து நீக்கும் எந்தவொரு அதிகாரமும் இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் முழுமையாக கட்சி அரசியலமைப்புக்கும்,சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமானவையாகுமென தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தினை மீறியமையினால் சின்னராசா லோகேஸ்வரன்; கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அதனால் வறிதாகும் பதவிக்கு இன்னொருவர் கட்சியால் நியமிக்கப்படுவாரென இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரையே கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.அது தொடர்பான கடிதமானது, கட்சியின் பொதுச்செயலாளரான எம்.ஏ சுமந்திரனால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகத்தின் தெரிவித்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீட்டிற்கு இலங்கை தமிழரசுக் கட்சியினர் எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்திருந்த நிலையில், லோகேஸ்வரன் ஆதரவாக வாக்களித்ததையடுத்து நீக்கம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இலங்கை தமிழரசுக்கட்சி வசமிருந்த கரைதுறைப்பற்று பிரதேசசபை தேசிய மக்கள் சக்தியின் வசம் தற்போது வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தன்னைத்தானே “பொதுச் செயலாளர்” என?
1