யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இன்றைய தினமும் குழப்பங்களை விளைவித்திருந்த நிலையில் சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.கையடக்கத் தொலைபேசி வழியே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையில் அருச்சுனாவால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.தமிழரசுக்கட்சி வசமுள்ள யாழ்ப்பாண பிரதேச சபையொன்றின் உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் சேர்ந்தே கொலை மிரட்டலை விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மல்லாகம் முகவரியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கட்சி அலுவலகத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறானதொரு பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அடையாளம் தெரியாத இரண்டு நபர்களிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களையும் காவல்துறையிடம் கையளித்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தனக்கு பாதுகாப்பில்லையென்கிறார் அருச்சுனா!
7
previous post