வீழ்ந்துவரும் தேசிய மக்கள் சக்தி!

by ilankai

தெற்கில் தேசிய மக்கள் சக்தி தனது வசமுள்ள உள்ளுராட்சி சபைகளை தொடர்ச்சியாக இழந்துவருகின்றது.இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி தனது வசமுள்ள ஹிக்கடுவ நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நகர சபை நேற்று கூடியது.வாக்கெடுப்பின் போது, 9 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 10 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.அதன் விளைவாக, தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான வரவுசெலவுத்திட்டம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி இழக்கின்றது.ஏற்கனவே பெரும்பிரச்சாரங்களுடன் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியிருந்த கொழும்பு மாநகரசபையினை தேசிய மக்கள் சக்தி இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Posts