பாதிக்கப்பட்ட அனைத்து மக்களிற்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது.இந்நிலையில் வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா, சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.வவுனியா, சூடுவெந்தபுலவு கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது.வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட கொடுப்பனவினை பாதிக்கப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பலருக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக பதாதைகளை தாங்கி இருந்ததோடு கோசங்களையும் எழுப்பி இருந்தனர்.அத்துடன், ஊழலை ஒழிப்பதாக கூறிய அரசாங்கத்திற்கு நாம் வாக்களித்தோம். முன்னைய காலங்களைப் போல் அல்லாமல் பாரபட்சமற்ற முறையில் நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன் வைத்திருந்தனர்.இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் போலியான தகவல்களை வழங்கியதாக மாவட்ட செயலர் கொழும்பு அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் யாழ்.மாவட்டத்திற்கான வெள்ள பாதிப்பிற்கான கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரணம் இல்லையாம்?
10