யாழ்ப்பாண மாவட்டத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், 22 நாட்களில் மட்டும் 48 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். 🚫 எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல். அதிக விலைக்குப் பொருட்களை விற்றல் மற்றும் விலை விபரங்களைக் காட்சிப்படுத்தாமை. தரம் குறைந்த மற்றும் போலித் தயாரிப்புகளை விற்பனை செய்தல். மின் சாதனங்களுக்கு உத்தரவாதச் சீட்டு (Warranty) வழங்காமை. 🔥 எரிவாயு (Gas) பதுக்கல் தொடர்பில் எச்சரிக்கை: எரிவாயுவுக்குப் போலித் தட்டுப்பாட்டை உருவாக்குதல் அல்லது பதுக்குதல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றால், பொதுமக்கள் உடனடியாகப் பின்வரும் இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம்: 📞 தொடர்பு இலக்கம்: 021-221-9001 (மாவட்ட பாவனையாளர் அதிகார சபை) “தவறிழைக்கும் வியாபாரிகளுக்கு எதிராகத் தொடர்ந்தும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.” என மாவட்டச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Jaffna #ConsumerAffairs #LegalAction #GasScarcity #PriceControl #JaffnaDistrict #PublicAwareness #யாழ்ப்பாணம் #செய்திகள் #நுகர்வோர்_பாதுகாப்பு
📢 யாழில் 22 நாட்களில் 48 வர்த்தகர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை! – Global Tamil News
1