🇯🇵 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயங்குகிறது உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம்! ⚡⚛️ – Global Tamil News

by ilankai

2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து மூடப்பட்ட உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாசகி கரிவா (Kashiwazaki-Kariwa) அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் அரசு தயாராகி வருகிறது. 📍 முக்கிய விபரங்கள்: அமைவிடம்: டோக்கியோவிலிருந்து வடமேற்கே சுமார் 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நிர்வாகம்: டோக்கியோ மின்சார நிறுவனம் (TEPCO). வரலாறு: 2011 புகுஷிமா அணு உலை விபத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஆலை மூடப்பட்டிருந்தது. 📅 மீண்டும் ஆரம்பமாகும் திகதி: டெப்கோ (TEPCO) நிறுவனத்தின் தகவல்படி, இந்த ஆலையில் உள்ள ஏழு அணு உலைகளில் முதலாவது உலை 2026 ஜனவரி 20 ஆம் திகதி மீண்டும் தனது செயல்பாடுகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் எரிசக்தி தேவைகள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக   தொிவிக்கப்படுகின்றது #Japan #NuclearPower #KashiwazakiKariwa #TEPCO #Energy #Technology #NuclearEnergy #GlobalNews #JapanUpdate #TamilNews

Related Posts