அபகரிப்புக்குள்ளாகி கொண்டிக்கும் முல்லைத்தீவின் எல்லைகிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ளதும் இறுதிப்போரின் அவலங்களை சுமந்துள்ளதுமான முல்லைத்தீவு கரைத்துறைபற்று பிரதேச சபையை தென்னிலங்கை கட்சியொன்று கைப்பற்றியுள்ளது.வடமாகாணத்தில் முதன்முறையாக தேசிய மக்கள் சக்தி தமிழ் சபையொன்றை கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை வென்றிருக்கின்றது. முன்னதாக ஆட்சியை கைப்பற்றியிருந்த தமிழரசுக்கட்சியின சுமந்திரன் அணி தவிசாளர் தோற்கடிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது தேசிய மக்கள் சக்தி தனது அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.இதனிடையே தென்னிலங்கையில் தனது கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த காவல்துறையை சேர்ந்த ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த பத்மகுமார உள்ளிட்ட குழு ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிளைத் திருடப்பட்டுள்ளது.முன்னதாக, தேசிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார, களுகலையில் இருந்து ஹல்வின்ன நோக்கி ஒரு டாக்ஸியில் பயணித்தபோது, இலங்கை காவல்துறையினை சேர்ந்த ஒருவர் தனது டாக்ஸியை நிறுத்தி தன்னைத் தாக்க முயன்றதாக புகார் செய்துள்ளார்.
கரைதுறைபற்று தேசிய மக்கள் சக்தி வசம்!
2
previous post