இளைஞன் ஒருவருடனான தொலைபேசி உரையாடல் வாக்கு வாதமாக முற்றியதை அடுத்து, கும்பல் ஒன்று குறித்த இளைஞனை தேடி சென்று படுகொலை செய்துள்ளது. வவுனியாவில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் தவசி குளத்தை சேர்ந்த 19 வயதான இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞனுக்கும் பிறிதொரு இளைஞனுக்கும் நேற்றைய தினம் தொலைபேசியில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அதனை அடுத்து சிறிது நேரத்தில் வாக்குவாதப்பட்ட இளைஞன் தன்னுடன் மேலும் மூவரை அழைத்து வந்து குறித்த இளைஞன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கி விட்டு , தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இளைஞனை , வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த செட்டிக்குளம் பொலிஸார் 19 மற்றும் 22 வயதுகளுடைய மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் மற்றைய சந்தேகநபரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தொலைபேசி உரையாடல் வாக்குவாதமாக மாறியதில் இளைஞனை தேடி சென்று படுகொலை செய்த கும்பல்
7