யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அமைதிவழிப் போராட்டத்தின் போது,காவல்துறையினரால் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 🔴 போராட்டத்தின் பின்னணி: காணி விடுவிப்பு: தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீதிமன்றத் தடை: நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ⛓️ கைது செய்யப்பட்டவர்கள்: போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து பின்வருவோர் கைது செய்யப்பட்டுள்ளனர்: வேலன் சுவாமிகள் (மதத் தலைவர்) தியாகராசா நிரோஷ் (வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர்) வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர். 🛡️ கள நிலவரம்: “நாங்கள் அமைதியான முறையிலேயே போராடுகிறோம், விகாரைக்குள் நுழையவோ அல்லது சேதம் விளைவிக்கவோ இல்லை. பொது வீதியை மறிக்க உங்களுக்கு அதிகாரம் யார் தந்தது?” என போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். பெருமளவிலான கலகம் அடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் கடும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்தும், மக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #Jaffna #Thaiyitti #Protest #HumanRights #LKA #PoliceAction #BreakingNews #TamilNews #LandRights #SrilankaNews #ThaiyittiVihara #Arrests
🚨 தையிட்டியில் பதற்றம்: மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் அதிரடி கைது! – Global Tamil News
1