வடமாகாண ஆளுநர் தன்னை சுற்றி ஒரு ஆமாம் சாமி கும்பலை தயார்படுத்திக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் வலுக்க தொடங்கியுள்ளதுஇந்நிலையில் ஆமாம் சாமி கும்பலை தவிர்த்து ஏனையோரை திட்டுவது தற்போது பிரசித்தமாகிவிட்டது.அவ்வகையில் தனது புதிய பேச்சில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிந்து, விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். சப்பைக்கட்டு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்குக் காட்டமாகத் தெரிவித்தார்.’கடந்த ஓராண்டாக நான் பல விடயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம். ஒரு தடவை சொன்னால் அதனைச் செய்து முடிக்க வேண்டும். உங்களது செயற்பாடுகளால் நான் விரக்தியடைந்திருக்கின்றேன். நான் எனது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற உங்களுக்கு எதையும் கூறவில்லை. இந்த மாகாணத்தின் கல்வியை மேம்படுத்தவே பணிப்புரைகளை வழங்குகிறேன். ஒரு சாதாரண இடமாற்றத்தைக் கூடச் செய்ய முடியாது, நடவடிக்கை எடுக்க முடியாது என்றால் நீங்கள் ஏன் அந்தப் பதவிகளில் இருக்கிறீர்கள்?’ என ஆளுநர் கேள்வி எழுப்பினார்.மேலும், ‘எல்லாவற்றுக்கும் மேலதிகாரிகளிடமே கேட்டுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குத் துணிவு வேண்டும். அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இல்லாவிடின் பதவிகளை விட்டுச் செல்லுங்கள்’ எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஆளுநரின் புதிய வெளியீடு!
6
previous post