பருத்தித்துறை யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த 22 உரிமையாளர்களுக்கு தலா 5,000 ரூபாய் வீதம், மொத்தம் 1,10,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன? பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு கள விஜயத்தின் போது, நுளம்பு பெருகும் இடங்களைக் கொண்டிருந்த ஆதன உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். பருத்தித்துறை நகரசபை எல்லை: 10 பேர் அல்வாய் பிரிவு: 05 பேர் புலோலி பிரிவு: 07 பேர் நீதிமன்ற நடவடிக்கை: பொதுச்சுகாதார பரிசோதகர்களான ப. தினேஷ் மற்றும் க. கிருஸ்ணரட்சகன் ஆகியோரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து நீதமன்றம் இந்த தண்டப்பணத்தை விதித்து தீர்ப்பளித்தது. பொதுமக்களின் கவனத்திற்கு: மழைக்காலம் மற்றும் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், உங்கள் வீட்டுச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் நுளம்பு பெருக்கத்தைத் தடுத்து, சட்ட நடவடிக்கைகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். #PointPedro #Jaffna #DenguePrevention #HealthAlert #PublicHealth #SriLanka #யாழ்ப்பாணம் #பருத்தித்துறை #டெங்குவிழிப்புணர்வு #சுகாதாரம்
📢 : பருத்தித்துறையில் டெங்கு நுளம்பு பெருகும் சூழல் – 22 பேருக்கு தண்டம்! – Global Tamil News
6