2
வவுனியாவில் குடும்ப பெண் படுகொலை – கணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் வவுனியாவில் குடும்ப பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கணவர் கழுத்தில் வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருவேப்பன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் , கணவர் கழுத்தில் காயங்களுடன் காணப்படுவதாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த கணவரை மீட்டு , வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் , சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.