மாகாணசபை தேர்தலை வலியுறுத்தி தமிழ் கட்சிகளது தலைவர்கள் இந்திய தூதரை கொழும்பில் சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில் மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றதென இலங்கை பிரதமர் அறிவித்துள்ளார்.அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.அதேவேளை ‘’வளமான நாடு அழகான வாழ்க்கை’’ என்ற கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளது.அது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சி முறைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அரசிலமைப்பு இன்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய முடியாது. அது தொடர்பான அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றதெனவும் இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தல் நடக்கும்!
4
previous post