யாழில் விபத்துக்குள்ளானது உந்துருளிகளை ஏற்றிச் சென்ற கன ரக வாகனம்

by ilankai

உந்துருளிகளை ஏற்றிச் செல்லும் கன ரக வாகனமொன்று யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (18) அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி, அருகிலுள்ள காணிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.இந்த கன ரக வாகனம் யாழ்ப்பாணம் நகரிலிருந்து பருத்தித்துறைக்கு உந்துருளிகளை ஏற்றிக்கொண்டு பயணித்தபோதே விபத்தில் சிக்கியுள்ளது.இந்த விபத்தில் வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளானபோதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அச்சுவேலிப் காவல்துறையினர் தெரிவித்தனர்.வாகனம் விபத்தில் சிக்கியதற்கு அதன் வேகக்கட்டுப்பாடு இழந்தமை காரணமா அல்லது சாரதியின் தூக்க கலக்கம் காரணமா என வெவ்வேறு கோணங்களில் அச்சுவேலிக் காவல்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

Related Posts