மு.க.ஸ்டாலினைச் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை

by ilankai

தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறை அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரவை மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும்  தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான  சந்திப்பு இன்று முதலமைச்சர் செயலகத்தில் சுமார் 1.00 மணி நேரம் இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொ எங்கரநேசன், செ.கஜேந்திரன்,  த.சுரேஸ், தேசிய அமைப்பாளர், க.சுகாஷ், ந.காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த மனுவைக் கையளித்தனர்.மேலும் குறித்த சந்திப்பில் தீர்வின்றி நீடித்துவரும் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தவும் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காணவும் வலியுறுத்தியும்  மீனவர் தொடர்பில் தனியான மனுக் கையளிக்கப்பட்டுள்ளது. 

Related Posts