வடக்கில் புகையிரத கட்டமைப்புக்களை கட்டமைக்க இந்தியா உதவியிருந்த நிலையில் இயற்கை அனர்த்ததினால் சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு இலங்கை ஜனாதிபதி சீனாவிடம் கோரியுள்ளார்.இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிறப்பு பிரதிநிதியூடாக சீன அரசாங்கத்திடம் இலங்கை ஜனாதிபதி அனுர வேண்டுகோளை விடுத்துள்ளார். அத்தோடு இலங்கை எதிர்கொண்ட அனர்த்த நிலைமை மற்றும் மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் குறித்தும் சீன பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தியதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சீனா இலங்கைக்கு வழங்கிய பொருள் மற்றும் நிதி உதவியையும் அவர் மனப்பூர்வமாக பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.முன்னதாக இலங்கையின் அனுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையான புகையிரத பாதையை இந்தியா அமைத்து வழங்கியுள்ளது.
புகையிரத பாதைக்கு இந்தியாவை தொடர்ந்து சீனா!
5