வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான பாதீடு (Budget) இன்றைய தினம் (வியாழக்கிழமை) சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, பெரும்பாண்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சபையில் நடந்தது என்ன? தவிசாளர் தியாகராசா நிரோஷ் அவர்களால் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் மீதான விவாதங்கள் இடம்பெற்றன. 36 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சபையில், ஒரு உறுப்பினர் அண்மையில் காலமானதாலும், மற்றொருவர் இன்றைய அமர்வில் கலந்துகொள்ளாததாலும் 34 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்றனர். வாக்கெடுப்பு விபரம்: தேசிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் மாத்திரமே பாதீட்டிற்கு எதிராக வாக்களித்தனர். ஏனைய 25 உறுப்பினர்கள் பாதீட்டிற்கு ஆதரவாக வாக்களித்து அதனை நிறைவேற்றினர். ஆதரவாக வாக்களித்தவர்கள்: இலங்கை தமிழரசு கட்சி – 11 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 05 உறுப்பினர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 04 உறுப்பினர்கள் சுயேச்சை குழுக்கள் – 03 உறுப்பினர்கள் தமிழ் மக்கள் கூட்டணி – 01 உறுப்பினர் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) – 01 உறுப்பினர் கேக் வெட்டி கொண்டாட்டம்: மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் அடங்கிய இந்தப் பாதீடு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை அடுத்து, தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சபையில் கேக் வெட்டி தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பதில் தமக்குக் கிடைத்த இந்த வெற்றியை ஒருமித்த குரலில் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். #Kopay #ValikamamEast #Budget2026 #PradeshiyaSabha #NorthernProvince #Jaffna #TamilPolitics #BudgetSuccess #LocalGovernment #Development #NPP #ITAK #DTNA #TNPF #TPA #EPDP
கோப்பாய் (வலி. கிழக்கு) பிரதேச சபை பாதீடு பெரும்பான்மையுடன் வெற்றி! கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்! 🎂🎉 – Global Tamil News
4