வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் பாதீட்டினை தேசிய மக்கள் சக்தியினர் மாத்திரம் எதிர்த்த நிலையில் பெரும்பான்மையுடன் பாதீடு சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் , உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வலி. கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையின் பாதீடு தவிசாளர் தியாகராசா நிரோஸினால் சபையில் இன்றைய தினம் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டதை, தொடர்ந்து பாதீட்டின் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அதன் பின்னர் 36 உறுப்பினர்களை கொண்ட சபையில் , ஒருவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் இன்றைய தினம் சபைக்கு சமூகமளிக்காதமையால் 34 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தனர். அவர்களில் தேசிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , ஏனைய 25 உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர். பாதீட்டுக்கு ஆதரவாக , இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த 11 உறுப்பினர்கள் ,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த 05 உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்திற்கு சமூகமளிக்காத நிலையில் 04 உறுப்பினர்கள் , தமிழ் மக்கள் கூட்டணியின் இரு உறுப்பினர்களில் ஒருவர் அண்மையில் காலமான நிலையில் ஒரு உறுப்பினரும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினர் மற்றும் சுயேச்சை குழுக்களின் 03 உறுப்பினர்கள் ஆகிய 25 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்
கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்
2