கிளிநொச்சியில் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு – டிப்பர் குடைசாய்ந்து விபத்து

கிளிநொச்சியில் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு – டிப்பர் குடைசாய்ந்து விபத்து

by ilankai

கிளிநொச்சியில் சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் டிப்பர் வாகனம் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்து எடுத்து சென்ற டிப்பர் வாகனத்தினை பொலிஸார் வழிமறித்த வேளை பொலிசாரின் சமிக்ஞையை மீறி டிப்பரை சாரதி ஓட்டி சென்றுள்ளார். அதனை பொலிஸார் துரத்தி சென்ற வேளை உள்ளக வீதியூடாக தப்பி செல்ல முற்பட்ட நிலையில் , டிப்பரின் சில்லுகளை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதில் டிப்பர் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளானது. அதனை அடுத்து தப்பியோட முற்பட்ட சாரதியை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து  வருகின்றனர். 

Related Posts