ஏட்டிக்குப்போட்டி சந்திப்புக்கள்!

by ilankai

இந்திய ஆட்சியாளர்களுடனான முரண்பாட்டு போக்கினை கைவிட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இன்று தமிழரக முதலமைச்சர் ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்துள்ளனர்.அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகிதம் சந்திப்பு நடைபெற்றிருந்தது.இந்நிலையில் ஏட்டிக்கு போட்டியாக இந்திய உயர்தானிகரை ஆறு தமிழ் கட்சித் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர்.இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள்  ஒன்றாக இணைந்து  இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகரை எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளனர்.தமிழரசு கட்சியின் பதில் தலைவர் எம் கே சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகார விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், , ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா  (வேந்தன்) மற்றும் சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் சந்திப்பில் இடம்பெறுகின்றனர்.சந்திப்பில் ஆறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக தயாரித்த மஜகர் இந்தியா உயர்தனிகரிடம் கையளிக்கப்படவுள்ளது.சந்திப்பில் மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதோடு நிலையான சமஸ்டி தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட உள்ளது. 

Related Posts