“அநுர சிங்கமா? சிங்கத்தின் பிள்ளைகளா?” மானிப்பாய் பிரதேச சபையில் காரசார விவாதம்; 2026க்கான பாதீடு நிறைவேற்றம்! by admin December 18, 2025 written by admin December 18, 2025 யாழ். வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. அதேவேளை, அனர்த்த நிவாரணப் பணிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் குறித்து சபையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. நிவாரணப் பணிகளில் முறைகேடு? – உறுப்பினர்கள் குற்றச்சாட்டு: அனர்த்த நிவாரணங்களுக்கான பதிவுகளின் போது அதிகாரிகள் சீராகச் செயற்படவில்லை என உறுப்பினர்களான உஷாந்தன் மற்றும் ரமணன் ஆகியோர் குற்றம்சாட்டினர். உறுப்பினர் ரமணன்: “அநுரவை சிங்கம் என்றும், தாங்கள் சிங்கத்தின் பிள்ளைகள் என்றும் NPP-யினர் நினைக்கின்றனர். ஆனால், கிராம சேவகரிடம் தனியாகப் பெயர் பட்டியலைக் கொடுத்து அரசியல் செய்வது இவர்கள்தான். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.” உறுப்பினர் உஷாந்தன்: “கட்டுடை இடைத்தங்கல் முகாமில் நாம் பொருட்களை வழங்கிய பின், அடுத்த நாள் வந்து ‘எல்லாம் கிடைத்ததா?’ என NPP அமைப்பாளர் கேட்பது மக்களை ஏமாற்றும் செயல். முறையான பதிவுகளை எடுக்க அரசாங்கத்திற்கு வக்கில்லை.” தேசிய மக்கள் சக்தியின் பதில்: நிவாரணப் பணிகளில் ஊழல்கள் நடப்பது தமக்குத் தெரியும் என்றும், மக்களுக்குச் சேர வேண்டிய நிதி சரியாகச் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் NPP பெண் உறுப்பினர் சபையில் விளக்கமளித்தார். 2026 பாதீடு நிறைவேற்றம்: தவிசாளர் கந்தையா யெசீதன் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு 20 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (4), ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (3), தமிழ் மக்கள் கூட்டணி (2), EPDP (2), ஐக்கிய மக்கள் சக்தி (1). எதிராக: தேசிய மக்கள் சக்தியின் (NPP) 6 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். இரண்டு உறுப்பினர்கள் அமர்வில் கலந்துகொள்ளாத நிலையில், பெரும்பான்மை ஆதரவுடன் பாதீடு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அநுர சிங்கமா? சிங்கத்தின் பிள்ளைகளா?” – மானிப்பாய் பிரதேச சபையில் காரசார விவாதம். 2026க்கான பாதீடு நிறைவேற்றம்! யாழ். வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. அதேவேளை, அனர்த்த நிவாரணப் பணிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் குறித்து சபையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. நிவாரணப் பணிகளில் முறைகேடு? – உறுப்பினர்கள் குற்றச்சாட்டு: அனர்த்த நிவாரணங்களுக்கான பதிவுகளின் போது அதிகாரிகள் சீராகச் செயற்படவில்லை என உறுப்பினர்களான உஷாந்தன் மற்றும் ரமணன் ஆகியோர் குற்றம்சாட்டினர். உறுப்பினர் ரமணன்: “அநுரவை சிங்கம் என்றும், தாங்கள் சிங்கத்தின் பிள்ளைகள் என்றும் NPP-யினர் நினைக்கின்றனர். ஆனால், கிராம சேவகரிடம் தனியாகப் பெயர் பட்டியலைக் கொடுத்து அரசியல் செய்வது இவர்கள்தான். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.” உறுப்பினர் உஷாந்தன்: “கட்டுடை இடைத்தங்கல் முகாமில் நாம் பொருட்களை வழங்கிய பின், அடுத்த நாள் வந்து ‘எல்லாம் கிடைத்ததா?’ என NPP அமைப்பாளர் கேட்பது மக்களை ஏமாற்றும் செயல். முறையான பதிவுகளை எடுக்க அரசாங்கத்திற்கு வக்கில்லை.” தேசிய மக்கள் சக்தியின் பதில்: நிவாரணப் பணிகளில் ஊழல்கள் நடப்பது தமக்குத் தெரியும் என்றும், மக்களுக்குச் சேர வேண்டிய நிதி சரியாகச் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் NPP பெண் உறுப்பினர் சபையில் விளக்கமளித்தார். 2026 பாதீடு நிறைவேற்றம்: தவிசாளர் கந்தையா யெசீதன் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு 20 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (4), ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (3), தமிழ் மக்கள் கூட்டணி (2), EPDP (2), ஐக்கிய மக்கள் சக்தி (1). எதிராக: தேசிய மக்கள் சக்தியின் (NPP) 6 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். இரண்டு உறுப்பினர்கள் அமர்வில் கலந்துகொள்ளாத நிலையில், பெரும்பான்மை ஆதரவுடன் பாதீடு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
“அநுர சிங்கமா? சிங்கத்தின் பிள்ளைகளா?” – Global Tamil News
2