முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி கடத்த தயாராக இருந்த நிலையில் முல்லைத்தீவு கடற்படையினர், விஷேட அதிரடிபடையினரால் 3 கோடி பொறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி கடத்தப்பட இருப்பதாக முல்லைத்தீவு கடற்படைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து முல்லைத்தீவு விஷேட அதிரடிபடையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சாலை கடற்கரை பகுதியில் மகேந்திரா கப் ரக வாகனத்தில் வைத்து 140 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேக நபர் தப்பியோடியுள்ளார் இந்நிலையில், குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.கைப்பற்றப்பட்ட குறித்த கஞ்சா பொதி மற்றும் கப் ரக வாகனத்தையும் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
முல்லைத்தீவில் 3 கோடி கஞ்சா மீட்பு
3
previous post