திருகோணமலை குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் வருகை: உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருகோணமலை குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் வருகை: உறுப்பினர்கள் வெளிநடப்பு

by ilankai

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பு தொடர்பில் உப தவிசாளரால் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பபப்பட்ட நிலையில் இன்றைய தினம் சபை ஒன்று கூடியுள்ளது.இதன் போது முன்னர் தவிசாளராக செயற்பட்ட ஏ.முபாரக் இலஞ்ச ஊழல் ஆணைக்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நேற்று (16)பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சபைக்கு வருகை தந்தமையால் வரவு செலவு திட்டத்தை புறக்கணிக்கபட்டது.தேசிய மக்கள் சக்தி,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளரால் குறித்த தவிசாளரின் அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts