வேலணை பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை சபையின் விவாதத்திற்கு விட்ட வேளை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர். அதனை தொடர்ந்து பாதீட்டின் மீதான வாக்கெடுப்பில் , சபையின் 22 உறுப்பினர்களில் , தமிழரசு கட்சியின் 08 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 3 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இரு உறுப்பினர்களில் ஒருவரும் , ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினரும் , சுயேட்ச்சை குழுக்களின் 3 உறுப்பினர்களுமாக 17 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்களும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இரு உறுப்பினர்களில் ஒருவருமாக 05 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் 22 உறுப்பினர்களை கொண்ட சபையில் 17 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 5 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததன் அடிப்படையில் 12 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டது.
வேலணை பாதீடு – சைக்கிள் கட்சி ஒருவர் ஆதரவு ; இன்னுமொருவர் எதிர்ப்பு
0