பிரஜாசக்தியால் கரவெட்டியில் குழப்பம் – வெளிநடப்பு செய்த தவிசாளர்

by ilankai

கரவெட்டி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆசன ஒதுக்கீட்டில், தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டமையை அடுத்து இருவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாது வெளிநடப்பு செய்தனர். வடமராட்சி தெற்கு , மேற்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை செயலக கேட்போர் கூடத்தில் நாடளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதன் போது , தவிசாளர்களுக்கு பின் வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் ,  எவ்வித அங்கீகாரமும் அற்ற , மக்கள் பிரதிநிதிகளாக கூட தெரிவு செய்யப்படாத தேசிய மக்கள் சக்தி அரசியல் கட்சியை சேர்ந்த சிலருக்கு எவ்வாறு கூட்டத்தில் முன் வரிசையில் ஆசன ஒதுக்கீடு செய்யப்படும் என கேள்வி எழுப்பிய தவிசாளர் சுரேந்திரன், தானும் உப தவிசாளரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக வெளியேறினர்கூட்டத்தில் முன் வரிசையில் இருந்தவர்கள் பிரஜா சக்தி குழு உறுப்பினர்கள் என அறிய முடிகிறது. அதேவேளை தவிசாளர் வெளியேறி சென்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில். கூட்டத்திற்கு நான் செல்லும் முன்னரே தவிசாளர் பிரதேச செயலாளருடன் தன்னுடைய கதிரை ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக தர்க்கப்பட்டு வெளியேறி விட்டார்.நான் வந்து கூட்டத்தை தொடங்கிய போது அவர் இல்லை. எனக்கும் கதிரை ஒழுங்கமைப்புக்கும் சம்மந்தம் இல்லை. அதேபோன்று தேசிய மக்கள் சக்திக்கும் தொடர்பில்லை.தவிசாளர் வெளியேறிமை தொடர்பில் அவருடன்  அன்போடு பேசி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன். கூட்டத்தை புறக்கணித்து செல்வது தலைமத்துவத்துக்கு அழகில்லை என எடுத்துக் கூறினேன்.அவர்கள் கேட்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி தெரிவித்துள்ளார். 

Related Posts