பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு அதிரடித் தடை: மாநகர சபையில் முக்கிய தீர்மானம் –...

 பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு அதிரடித் தடை: மாநகர சபையில் முக்கிய தீர்மானம் – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான பழைய பூங்கா (Old Park) பகுதியில் இனி எந்தவிதமான புதிய கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என யாழ். மாநகர சபை அதிரடித் தீர்மானம் எடுத்துள்ளது. 📅 மாநகர சபை அமர்வில் நடந்தது என்ன? இன்றைய தினம்  (புதன்கிழமை) மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் நடைபெற்ற மாதாந்த அமர்வில், பிரதி முதல்வர் இ.தயாளன் இந்தப் பிரேரணையை முன்வைத்தார். 🚶‍♂️ தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வெளிநடப்பு: பழைய பூங்கா பகுதியில் கட்டடம் அமைப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய தேசிய மக்கள் சக்தியின் (NPP) 10 உறுப்பினர்கள், “நாட்டின் சட்டத்திற்கும் நீதிமன்றிற்கும் மதிப்பளிக்கிறோம்” எனக் கூறி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 🏟️ இராணுவ முகாம் அகற்றப்படுமா? – புதிய யோசனை: சபையில் உரையாற்றிய பிரதி முதல்வர் இ.தயாளன் ஒரு முக்கிய மாற்று யோசனையை முன்வைத்தார்: “சிங்கள மகாவித்தியாலயத்தில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்றி, அந்த இடத்தில் உள்ளக விளையாட்டு அரங்கு (Indoor Stadium) ஒன்றை அமைக்கலாம்.” இந்த யோசனையை சபையிலிருந்த ஏனைய அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுடன், பழைய பூங்கா தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.    #Jaffna #JaffnaMC #OldParkJaffna #JaffnaNews #BreakingNewsTamil #SriLankaPolitics #NPP #UrbanDevelopment #TamilNews #JaffnaMunicipality

Related Posts