சிங்கள வித்தியாலயம்:விளையாட நல்ல இடம்!

by ilankai

யாழ்.நகரிலுள்ள சிங்கள மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றி அதில் உள்ளக விளையாட்டு அரங்கை  அமைக்குமாறு தீர்மானமொன்று இன்றைய யாழ் மாநகர அமர்வில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகரசபையின் பிரதி  முதல்வர் தயாளனினால் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.இதனிடையே தீர்மானத்தின் பேர்து தேசிய மக்கள் சக்தியின் பத்து யாழ்.மாநகரசபை உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்திருந்தனர்.ஏற்கனவே உள்ளக விளையாட்டரங்கை பழைய பூங்காவில் நிறுவ முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கு எதிராக நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அவ்விவகாரம் நீதிமன்றில் நிலுவையிலுள்ள நிலையில் நீதிமன்ற அவமதிப்பாக மாறலாமென்ற நிலையில் தாம் வெளியேறியதாக ஊடகங்களிடையே விளக்கமளித்துள்ளனர்.எனினும் நகரப்பகுதியில் தேவைக்கதிகமாக குவிக்கப்பட்டுள்ள படையினர் வெளியேற்றப்படுவது தொடர்பிலான ஊடகவியலாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில் ஜனாதிபதியே வடகிழக்கில் தேவையற்ற படையினர் வெளியேற்றப்படுவரென உறுதியளித்துள்ளதாக  யாழ்.மாநகரசபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபிலன் தெரிவித்துள்ளார். முன்னதாக யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம்இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில், 12 பரப்பளவு காணி கையகப்படுத்தப்பட்டு, அதில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts