குவைத் நாட்டில் தலைமறைவாக இருந்த நிலையில், நாடு திரும்பி 4 நாட்களேயான நிலையில் ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சகா ‘அஜித்’ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 📍 கைது விபரம்: மட்டக்களப்பு, கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (புதன்கிழமை, 17.12.25) காலை கொழும்பில் இருந்து சென்ற சிஐடி அதிகாரிகள் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். ‘அஜித்’ என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். 🔍 பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகள்: பேராசிரியர் கடத்தல் விவகாரம்: 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்தார். தலைமறைவு: சிஐடியினர் இவரைத் தேடி வந்த நிலையில், இவர் குவைத் நாட்டிற்குத் தப்பிச் சென்று அங்கு தலைமறைவாக இருந்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னரே இவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியிருந்தார். பிள்ளையானின் கைது: ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். பிள்ளையானிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான விசாரணைகளின் அடிப்படையிலேயே, அவரது சகாக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட அஜித் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். #Batticaloa #CID #Arrest #Pillayan #JusticeForRaveendranath #SriLankaNews #BreakingNews #LegalAction #TMVP #Maniampaththi #SriLankaPolitics
⚖️ மட்டக்களப்பில் அதிரடி: சிஐடியினரால் தேடப்பட்டு வந்த பிள்ளையானின் சகா 'அஜித்' கைது! – Global Tamil News
6