சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டு வருவதற்கான அழுத்தங்களை இந்திய அரசு வழங்க வேண்டும் என்றும், அதற்காக தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் தமிழகம் விரைந்துள்ளனர். அங்கு அவர்கள் தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர். 🗣️ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தது என்ன? தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக, இலங்கை அரசாங்கம் ‘ஏக்கிய இராச்சிய’ (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பினைத் திணிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதனைக் தடுத்து நிறுத்தி, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக, தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களைச் சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும். பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு, இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது. இந்நோக்கத்திற்காக, தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இவ்விடயங்களைத் தெளிவுபடுத்தி, அவர்களது ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்னை சென்று, அரசியல் தலைவர்களுடன் இவ்வாரம் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 👥 தமிழகம் சென்ற குழுவினர் விபரம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குறித்த குழுவில் பின்வருவோர் உள்ளடங்கியுள்ளனர்: செ. கஜேந்திரன் (தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்) த. சுரேஷ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்) சட்டத்தரணி க. சுகாஷ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர்) சட்டத்தரணி ந. காண்டீபன் (தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரச் செயலாளர்) பொ. ஐங்கரநேசன் (தமிழ் தேசிய பசுமை இயக்கம்) #GajenPonnambalam #TNA #TamilsInSriLanka #EelamTamils #Sovereignty #Federalism #IndiaPressure #TamilNaduPolitics #TamilPoliticalSolution #இலங்கைதமிழர் #கஜேந்திரகுமார் #சமஷ்டி #இந்தியஅரசு #தமிழகஅரசியல்
📰 தமிழக அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கஜேந்திரகுமார் தலைமையிலான குழு தமிழகம் விரைவு! – Global Tamil News
4