5
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நெருக்கமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பல ஐரோப்பிய தலைவர்களுடன் மிக நீண்ட மற்றும் மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர் டிரம்ப் இக்கருத்தை செய்யாளர்களிடம் வெளியிட்டார்.இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை அடைவதற்கு ஐரோப்பா மிகப்பெரிய ஆதரவை வழங்கி வருவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.ஐரோப்பிய தலைவர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள் என்று டிரம்ப் கூறினார். மேலும் அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பலமுறை பேசியதாகவும் தெரிவித்தார்.