🚨  அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிடிவிறாந்து பிறப்பிப்பு! ✈️ பயணத் தடை! – Global Tamil News

by ilankai

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என வன்முறையாகப் பேசிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகாத தேரருக்கு பிடிவிறாந்து (வாரண்ட்) பிறப்பித்ததுடன் அவருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 📌 வழக்கின் பின்னணி: என்ன நடந்தது? கடந்த 2023 ஒக்டோபர் 23ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், சுமண ரத்ன தேரர் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருந்தார். சட்ட நடவடிக்கை: இதற்கு எதிராக சட்டத்தரணி தனுக்க ரணஞ்சக, புறக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்: சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரைக் கைது செய்யுமாறு கடந்த மாதம் அறிவுறுத்தியிருந்தது. ⚖️ இன்றைய நீதிமன்ற நடவடிக்கை: வழக்கு நேற்று (டிசம்பர் 15, திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, தேரர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. அவர் மறைந்திருக்கும் இடத்தைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, நீதவான் உடனடியாக தேரரைக் கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பித்தும், அவர் வெளிநாடு செல்வதைத் தடுத்து பயணத்தடை விதித்தும் உத்தரவிட்டார். அடுத்த வழக்கு விசாரணை: ஜனவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #BatticaloaCourt #HateSpeech #MattersOfJustice #SumanarathnaThera #TamilNews #மட்டக்களப்பு #நீதி

Related Posts