🗑️ கட்டையாலடி மயானம் அருகில் கழிவுகள் குவிப்பு – நல்லூர் பிரதேச சபை மீது குற்றச்சாட்டு! யாழ்ப்பாணம் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் வீசப்படும் கழிவுகளால், அவ்வீதியூடாகப் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து நல்லூர் பிரதேச சபை அசண்டையீனமாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த மயானத்திற்கு அருகாமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் விடுதி மற்றும் யாழ்ப்பாண நகருக்கு குடிநீரை வழங்கும் கிணறுகள் காணப்படுகின்றன. பெருமளவானோர் பயன்படுத்தும் இந்த வீதியில், தகனக் கிரியைகளுக்காக வருவோரும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இந்நிலையில், அப்பகுதிகளில் உணவு, கோழி இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை வீசிச் செல்வதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடுகளும் ஏற்படுகின்றன. நாய்கள் கழிவுகளை வீதியில் இழுத்து விடுவதாலும், காகங்கள் அவற்றை அண்டைப்பகுதிகளில் வீசுவதாலும் அப்பகுதி மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, அப்பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை நல்லூர் பிரதேச சபை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், கண்காணிப்புக் கமராக்களைப் பொருத்தி, கழிவுகளை வீசிச் செல்வோரை இனங்கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #கட்டையாலடி #யாழ்ப்பாணம் #கோண்டாவில் #கழிவுபிரச்சனை #சுகாதாரசீர்கேடு #நல்லூர்பிரதேசசபை #குற்றச்சாட்டு #மக்கள்அவதி #பொறுப்பற்றநடவடிக்கை #கண்காணிப்பு #சமூகபிரச்சனை #Jaffna #WasteManagement #Nallur
🗑️ கட்டையாலடி மயானம் அருகில் கழிவுகள் குவிப்பு – நல்லூர் பிரதேச சபை மீது குற்றச்சாட்டு! – Global Tamil News
2