நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் களனி ரஜமஹா விகாரையில் தாய்லாந்து – கம்போடியா முரண்பாட்டுக்கு அமைதி தீர்வு காண வலியுறுத்தி நடைபெற்ற மத வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 🛑 எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள்: அரசியல் இலாபம் தவிர்ப்பு: “தற்போதைய நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சினர் முயற்சிக்கக் கூடாது. அரசியல் வேறுபாடுகளின்றி அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.” விமர்சனங்கள் போதாது: ஒருசிலர் வெறும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைக்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் வழங்கவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும். 🌏 சர்வதேச அழைப்பு: தாய்லாந்து – கம்போடியா இடையேயான முரண்பாட்டுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணப்பட வேண்டும். அமைதி நிலவ வேண்டும். “இவ்வாறான முரண்பாடுகளினால் அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதால், உலக நாடுகள் இந்த விடயத்தில் அதீத கவனம் கொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். #Onalpe SobithaThero #NationalCrisis #UnityForRecovery #சகோதரத்துவம் #அரசியல் #பேரழிவு #இலங்கை
🕊️ பேரிடர் மீட்சி – அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – Global Tamil News
2