5
வீதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறிக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அஹுங்கல்ல பகுதியை சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியே உயிரிழந்துள்ளார். மாத்தறை – அளுத்கம வீதியில் , வெலிபென்ன பொலிஸார் , வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை , வீதியில் மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறிக்க முற்பட்ட வேளை, மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது மோதியதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டியும் படுகாயமடைந்த நிலையில் , களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வெலிபென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.