இந்தியா தொடர்பில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதுடன் தமிழக அரசியல் தலைவர்களைச் சந்திக்க இவ் வாரத்தில் தமிழகத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள் செல்லவுள்ளனர்.புயணிக்கும் அணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,பொ.ஐங்கரநேசன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் தசிய அமைப்பாளர் சுரேஸ் உத்தியோகபூர்வ பேச்சாளர், சுகாஸ் ஆகியோருடன் பிரசாரச் செயலாளர் காண்டீபன் உள்ளிட்டோர் உள்ளடங்கியுள்ளனர். தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக சிறீலங்கா அரசு ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டு வருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளது. இந்நோக்கத்திற்காக தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து அவ்விடயங்களை தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்னை சென்று அரசியல் தலைவர்களுடன் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக சந்திக்கும் தமிழகத் தலைவர்கள் அணியில் செந்தமிழன் சீமான் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரையும் உள்ளடக்க ஆதரவாளர்கள் கோரிக்கைகளை விடுத்துவருகின்றனர்.
முன்னணி விஜயையும் சந்திக்க ஆசை!
2
previous post