யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தனது பயணத்தின் மற்றொரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான பறப்பொன்று நடாத்தப்பட்டுள்ளது.எரிபொருள் நிரப்புதல் மற்றும் விமான பணியாளர்களின் ஓய்விற்காக இந்த விமானம் வந்துள்ளது; நாளை புறப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.இதனிடையே யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (15) மதியம் இடம்பெற்றிருந்தது.யாழ்ப்பாணம் விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், பொறியியலாளர் ஆகியோரால் சர்வமத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது. இதேவேளை கட்டம் 02 க்கான வேலைகள் ஜனவரி 2026 இல் திட்டமிடப்பட்டுள்ளது.
9
previous post