🚨அம்பாறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி! by admin December 15, 2025 written by admin December 15, 2025 🚨திட்டமிட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய உதவியாளர் சிக்கினார்! கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் வருண ஜயசுந்தரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், எல்பிட்டிய – சாதமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், T-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 🔍 பறிமுதல் செய்யப்பட்டவை: T-56 ரக துப்பாக்கி – 1 மெகசின்கள் – 2 தோட்டாக்கள் – 45 👥 சந்தேக நபர் குறித்த தகவல்கள்: வயது: 64 பிரதேசம்: சாதமுல்ல பின்னணி: மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேக நபர், ஒரு திட்டமிட்ட குற்றவாளியின் நெருங்கிய உதவியாளர் என்பது தெரியவந்துள்ளது. திட்டம்: மேலும், குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்திப் பல கொலைகளைச் செய்ய இந்தச் சந்தேக நபர் திட்டமிட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாகப் படபொல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #GunArrest #T56 #Ampara #CrimeNews #police #சாதமுல்ல #துப்பாக்கி #கொலைத்திட்டம் #எல்பிட்டிய
🔫🚨 T-56 ரக துப்பாக்கி மற்றும் 45 தோட்டாக்களுடன் நபர் கைது! – Global Tamil News
3