யாழ்ப்பாணத்தில் , உடைந்த தொலைபேசியை வைத்து ,நபர்களிடம் பணம் பறிக்கும் மோசடிக்காரன் தொடர்பில் மக்களை விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வோகோ ரக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர் ஒருவர் , ஆள் நடமாட்டம் அற்ற வீதிகளில் காத்திருந்து , வீதியில் தனியாக வரும் நபர்களை இலக்கு வைத்து , அவர்களை பின் தொடர்ந்து முந்தி சென்று , பின் வீதியோரமாக நின்று , அவர்களை முந்தி செல்ல விட்ட பின்னர் , பின்னர் மீண்டும் அவர்களை துரத்தி சென்று , வீதியில் தனது கைபேசி தவறி விழுந்ததாகவும் , அதற்கு மேலால் மோட்டார் சைக்கிளை நீங்கள் ஏற்றியதால் தனது தொலைபேசி உடைந்து விட்டதாக கூறி தர்க்கம் புரிந்து அவர்களிடம் பணம் பறித்து வருகின்றார். இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் , கண்காணிப்பு காமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் கண்டுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இருந்த போதிலும் குறித்த நபரை இதுவரையில் கைது செய்ததால் , நபரால் பாதிக்கப்பட்டாலோ , அல்லது நபர் தொடர்பில் தகவல் அறிந்தாலோ அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேவேளை ,இப்படியான நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
யாழில். புதுவகை மோசடி – மக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்
2