இனியும் தனிச்சிங்களமா?

by ilankai

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமைக்கவேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.மக்கள் தொகையில் 25விழுக்காடானோர் தமிழ் மொழியை தமது தாய் மொழியாகக் கொண்டிருப்பதோடு நாட்டின் அரசியலமைப்பில் சிங்களமும் தமிழும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அறிவித்த சிங்களத்தை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாகக் கொண்ட கொள்கை இன்னும் யாதார்த்தமாக உள்ளதாக சிவில் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.அந்நடவடிக்கை தமிழ் மொழி பேசும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை நாட்டிலில் மீண்டும் மீண்டும் ஒதுக்கி வைக்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் சில, நாடு முழுவதையும் பாதித்த அண்மைய பேரழிவுகளின் குறுகிய போது மொழிக் கொள்கை செயற்படுத்தப்பட்டமை ஆகும். பேரிடர் தொடர்பான அரச அறிவிப்புகளை சிங்கள மொழியில் மட்டும் வெளியிடுதல்வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையின் அதிகாரப்பூர்வ வெளியீடு சிங்களத்தில் மட்டுமே இருக்கின்றமைஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பான அறிவிப்புகளும் சிங்களத்தில் மட்டுமே இருக்கின்றமைஅனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, சிங்களத்தில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுகின்றமைமாவட்டச் செயலாளர் முதல் கிராம அலுவலர் வரை பல அறிவிப்புகளும் சிங்களத்தில் மட்டுமே அனுப்பப்படுகின்றதென இலங்கை  ஜனாதிபதிக்கு சிவில் அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன..

Related Posts